Breaking News

FACT CHECK: சவூதியில் கொரானா சிகிச்சை முடித்து வருபவர்களுக்கு ரூ30,000/- பணம் கொடுக்கின்றதா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கலில் பலரும் சவூதியில் கொரோனா சிகிச்சை முடிந்து நலமாகி வீடு திரும்பும் நோயாளிகளுக்கு வழியனுப்பும் போது (அரபியல்லாத வெளி நாட்டவர்களுக்கும் கூட) கொடுக்கப்படும் சிறிய அன்பளிப்பு இது அதில் 1500 ரியால் = 30,000 ரூபாயும் உள்ளது




என்று ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையாயும் சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

சவுதி அரேபியாவின் ஆசிர் பிராந்தியத்தில் உள்ள சுகாதார அதிகாரிகள் கொரானாவில்  இருந்து மீண்ட நோயாளிகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து  சுகாதார இயக்குநரகம் சின்னத்துடன்  கூடிய ஒரு பையில் ஒரு ரோஜா, ஒரு பாட்டில் சானிட்டைசர், சில சாக்லேட் மற்றும் 1500 சவுதி ரியால் பணத்துடன் வலம் வரும் வீடியோ உண்மையில்லை  என மறுத்து உள்ளது

அந்த வைரல் வீடியோ குறித்து ஆசிர் சுகாதார இயக்குநரகம் நாம் மக்களுக்கு அந்த கிட் கொடுப்பது உண்மைதான் ஆனாால் அதில் உள்ள பணம் நாம் கொடுத்தது இல்லை மேலும்   இது போன்ற வதந்திகளை பரப்புவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் உத்தியோகபூர்வ ஆதாரங்களில் இருந்து சரியான தகவல்களை கொடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றது

அந்த பணம் அந்த வீடியோவில் உள்ள நபருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று இயக்குநரகம் செய்தியில் கூறியுள்ளது

அட்மின் மீடியா ஆதாரம்




எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback