FACT CHECK: 4000 இந்து பெண்களுக்கு தெரியாமலே கருப்பைகளை அகற்றிய முஸ்லீம் மருத்துவர் என பரவும் வதந்தி செய்தியின் ? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக தனது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த 4,000 இந்து பெண்களின் கருப்பைகளை அகற்றிய கொடூர இஸ்லாமிய டாக்டர் முகமது ரப்பீ.. இது புது வகையான ஜிகாத்.. இஸ்லாமிய மருத்துவர்கிட்ட சிகிச்சை பாக்குற பெண்கள் & குடும்பங்கள் ஜாக்கிரதை என சமூக வலைதளங்களில் ஓர் செய்தியுடன் ஓர் புகைபடத்தையும் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என பலரும் அட்மின் மீடியாவிடம் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
இலங்கையைச் சேர்ந்த பல முக்கிய செய்தித்தாள்களில், தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடைய முஸ்லீம் மருத்துவர் ஒருவர் 4,000 சிங்கள பௌத்த பெண்களுக்கு ரகசியமாக கருத்தடை செய்து உள்ளதாக வெளியாகியது.
இலங்கையின் வடமேற்கு பகுதியில் உள்ள குருநெகலா எனும் நகரத்தில் இருக்கும் மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் எனக் குறிப்பிட்டு செய்திகளில் வெளியாகியது. இதையடுத்து மருத்துவர் மொஹமத் ஷஃபி கைது செய்யப்பட்ட செய்தி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அதேசம்யம் தன் மீதான குற்றச்சாட்டை மொஹமத் ஷஃபி மறுத்து இருந்தார்
மேலும் இலங்கை நீதிமன்றத்தில் அவர் மீதான குற்றசாட்டுகள் பொய்யானது என்றும், பெண்களுக்கு விருப்பம் இல்லாமல் கருத்தடை செய்ததாக கூறப்படும் சம்பவத்திற்கும் மருத்துவர் ஷஃபிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும் அவருக்கும் இந்த சம்பவத்டுக்கும் எந்த தொடர்பும் இருப்பதாக எந்தவொரு ஆதாரங்களும் இல்லை என இலங்கையின் சட்ட அமலாக்க மற்றும் உளவுத்துறை தெரிவித்தது என செய்தி வெளியிட்டுள்ளது
அட்மின் மீடியா ஆதாரம்
அட்மின் மீடியா ஆதாரம்
Tags: மறுப்பு செய்தி