Breaking News

நம்ம பாய் எவ்வளவு அழகா எச்சி தொட்டு பழத்தில் கொரோனாவ எப்படி பரப்புறாங்க பாருங்க.

அட்மின் மீடியா
0
ஒரு முஸ்லீம் பழ வியாபாரி ஒருவர் தன் தள்ளுவண்டியில் பழங்களை அடிக்கி வைக்கும் வீடியோவில் தன் விரல்களில் எச்சில் செய்து பழங்களை எடுத்து அடுக்கி வைக்க்கும் காட்சி பதிவாகி இருக்கிறது



அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


அந்த வீடியோ சம்பவம் தற்போது நடந்தது இல்லை

அந்த வீடியோ சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்தது

அந்த வீடியோ பிப்ரவரி 16 ம் தேதி எடுக்கபட்டது

அந்த பழ வியாபாரி கைது செய்யபட்டுவிட்டார்


இந்த சம்பவம் குறித்து அம் மாவட்ட எஸ்பி மோனிகா சுக்லா அவர்கள் தெரிவித்தது என்ன வென்றால்

அந்த வீடியோ பிப்ரவரி 16-ம் தேதி எடுக்கப்பட்டு தற்போதும் வைரலாகி வருகிறது. வீடியோவை பதிவேற்றம் செய்த நபரை கண்டறிந்து, பின்னர் வைரல் வீடியோவில் இருக்கும் நபரை பிடித்துள்ளோம். ஐபிசி 269, 279 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது, அவர் ஏன் அப்படி செய்தார் என்பதை கண்டறிந்து வருகிறோம் என கூறினார்.


அவர் ஒரு சாதாரண தள்ளுவண்டி பழ வியாபாரி நாம் பணத்தை எண்ணும் போது எச்சில் வைத்து எப்படி எண்ணுவோம் அதேபோன்று அவர் பழங்களை எடுத்து விட்டார் அவ்வளவு தான் இதை சமூகத்தில் குழப்பம் விளைவிப்பவர்களால்  தவறான கருத்துடன் பரப்பப்படுகிறது

மேலும் பொய் கருத்தை பரப்புபவர்களே  சிந்திக்கமாட்டீர்களா

ஏன் இவர் மட்டும்தான் இவ்வாறு செய்தாரா

இவரைவிட மோசமான பல செயல்கள் செய்யக்கூடிய வியாபாரிகள் இருக்கிறார்கள்

உதாரணத்திற்கு ஒரு பானிபூரி விற்பவர் அவருக்கு சிறுநீர் வருகிறது ஆனால் அவர் கழிவறைக்குச் சென்று சிறுநீர் கழிக்காமல் அவர் கடையில் என்கின்ற ஒரு செம்பை எடுத்து அதில் சிறுநீர் கழித்து  வெளியே தெளித்து விட்டு அதை மீண்டும் உபயோகிப்பார். link

இது எவ்வளவு மோசமான  செயல் ஆனால் இதை பரப்ப மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் முஸ்லிம்கள் இல்லை அவர்கள் தொப்பி போடவில்லை மத துவேஷத்தை பரப்பும் வகையில் யாரும் இதுபோன்ற வீடியோக்களை பரப்ப வேண்டாம்

இது போன்று பல வீடியோக்கள் YouTube ல் இருக்கிறது. எனவே இதுபோன்ற வீடியோக்களை பரப்பி மக்களிடையே குழப்பத்தை விளைவிக்க வேண்டாம்.


அட்மின் மீடியா ஆதாரம்


https://thecognate.com/old-video-of-fruit-vendor-falsely-shared-as-muslim-man-spitting-spreading-coronavirus/

எங்கோ எப்போதோ நடந்த ஒரு சம்பவத்தை த்ற்போது நடந்தது போல் செய்யாதீர்கள் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள் 

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback