Breaking News

கடலில் மீன்பிடிக்க அனுமதி! - உற்சாகத்தில் மீனவர்கள்

அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் கொரானாவினால் ஏற்படும் பாதிப்பை தடுக்க மே மாதம் 3 ம்தேதி வரை ஊரடங்கு உத்தரவு உள்ளது

இதனால் அத்யாவசிய தேவைகளான மளிகை, காய்கறி, இறைச்சிகடைகளை மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 1 மனி வரை நடத்த  தமிழகத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது


இந்நிலையில் நாட்டுப்படகுகள் மற்றும்  இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகள் மூலம் தொடர்ந்து மீன்பிடிக்கலாம் என்றும் படகு உரிமையாளர்கள் கரோனாவைத் தடுக்க முகக்கவசம் மற்றும் கைஉறை போன்ற  பயன்படுத்தி பாதுகாப்புடன் இருக்கவேண்டும்

மேலும் மீன்பிடி துறைமுகம், மீன்பிடி இறங்குதளம், கடற்கரை பகுதிகளில் மீன்களைப் பொது ஏலம் மூலம் விற்கக் கூடாது. 


அந்த பகுதி மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு எந்த நாளில், எத்தனை படகுகளில் மீன்பிடிக்கச் செல்லலாம் என முடிவு செய்யும். 

தற்போதைய ஊரடங்கு காலம் மீன்பிடி தடைக்காலமாக கருதி விசைப்படகுகள் மீன்பிடியில் ஈடுபட அனுமதியில்லை என்று அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கில்  வீட்டில் முடங்கிக்கிடந்த மீனவர்கள் இதனால் உற்சாகமடைந்துள்ளனர். கடலுக்குள் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback