Breaking News

சமூகவலைதளத்தில் மதவெறியுடன் செயல்படாதீர்கள்! - அமீரக இந்திய தூதர்

அட்மின் மீடியா
0
முஸ்லிம்களுக்கு எதிரான பதிவுகள் பதிபவர்களுக்கு துபாய் இந்திய தூதுவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகே கொரோனாவை எதிர்த்து போராடி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பரவ முஸ்லிம்களே காரணம் என்பதாக ஒரு சிலர் சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட்டு வருகின்றார்கள்




குறிப்பாக வளைகுடாநாட்டில் பணினி புரியும் இந்தியர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிந்து வருகின்றனர் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

வளைகுடா நாட்டினர் பலரும், இந்திய அரசு இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். 


இதனை அடுத்து பிரதமர் மோடி, ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா வைரஸுக்கு மதம் கிடையாது, இதில் பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து கொரோனாவை எதிர்க்க வேண்டும். சகோதரத்துவம்தான் நமது கொள்கை” என்று பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதுவர் பவன் கபூர் ஐக்கிய அரபு வாழ் இந்தியர்களை கடுமையாக எச்சரித்துள்ளார். சமூக வலைதளங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பதிவதை நிறுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளார், “இந்தியாவிற்கும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் நல்ல உறவு உண்டு, இருவருக்கும் இடையே எந்த பாகுபாடும் இல்லை. எனவே பாகுபாடு காட்டுவது சட்டத்திற்கு எதிரானது. இதனை இந்தியர்கள் உணர வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback