Breaking News

ஊரடங்கில் வெளியே சுற்றாதீர்கள்: வழக்கு வாங்காதீர்கள்: வேலை, பாஸ்போர்ட், என அனைத்தும் சிக்கலாகும்

அட்மின் மீடியா
0
கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.



அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் பொதுமக்கள் வெளியில் வர அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் ஆனால் பலர் ஊரடங்கு உத்தரவை மீறுவோர்  மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடரப்படுகிறது. 

இவை சாதாரணமான பிரிவுகள் அல்ல. குற்றவியல் வழக்கின்கீழ் வருவதால், இதில் குற்றவாளியாக சேர்க்கப்படும் நபர்களால் வழக்கு முடியும் வரை ,

அரசு வேலைக்குச் செல்ல முடியாது.

பாஸ்போர்ட் பெற முடியாது

வெளிநாடும் செல்ல முடியாது,

காவல்துறையினரின் NOC பெற முடியாது

இதில் சிக்கும் இளைஞர்கள் அரசு மற்றும் தனியார் வேலையில் சேர்வதிலும், வெளிநாடு செல்வதிலும் சிக்கல் ஏற்படும் என்பதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் எனவே  அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வந்து வழக்கில் சிக்கி, வாழ்க்கையைத் தொலைக்காமல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

Tags: முக்கிய அறிவிப்பு

Share this