தமிழகத்தில் ஆலைகள் திறக்க அனுமதி : அரசானை வெளியிட்ட தமிழக அரசு
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது இதனால் பல தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் முக்கிய தொழிலதிபர்களுடன் சற்றுமுன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் காணொளி மூலம் ஆலோசனை செய்தார்
அதன்பின்பு தற்போது தமிழகத்தில் எந்தெந்த ஆலைகள் தொடர்ந்து இயங்கலாம் என்பது குறித்த அரசாணை வெளியாகியுள்ளது அந்த அரசானையில்
சுத்திகரிப்பு நிலையங்கள்,
இரும்பு ஆலைகள்
சிமெண்ட் ஆலைகள்
பெயிண்ட் உள்ளிட்ட ரசாயன ஆலைகள்,
கரும்பு ஆலைகள்
உர ஆலைகள்
கண்ணாடி ஆலைகள்
டயர் ஆலைகள்
மிகப்பெரிய காகித ஆலைகள்
ஆகியவை தொடர்ந்து இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் மேற்கண்ட ஆலைகளில் பணிபுரிபவர்கள் சமூக விலகலை கடைபிடிக்கவேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது
Tags: முக்கிய அறிவிப்பு