வட மாநிலங்களில் தொடரும் மனித நேயம்..ராஜஸ்தானில் இறந்த இந்துவை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்....
அட்மின் மீடியா
0
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரின் பஜ்ரங் நகர் பட்டா பாஸ்தி பகுதியில் வசித்து வந்த ராஜேந்திர பக்ரி என்ற நபர் புற்றுநோயால் இறந்தார் ஆனால் ஊரடங்கு காரணமாக அவா்களது உறவினா்கள் எவரும் வீட்டிற்கு வர முடியாமல் போனதால், இறுதிச்சடங்குகள் செய்யவும், சடலத்தை மயானத்துக்கு கொண்டு செல்லவும் முடியாமல் அவரது உடலை தகனம் செய்வது பெரும் சவாலாக மாறியது.
இந்த சூழ்நிலையில் அவரது வீட்டின் அருகே வசிக்கும் முஸ்லிம்கள் இறுதி சடங்குகளை செய்ய முன்வந்தனர். அவரது இறுதிச்சடங்குக்கு தேவையான ஏற்பாடுகளை செய்த அவா்கள், வீட்டில் இருந்து மயானம் வரை ராஜேந்திர பக்ரியின் சடலத்தை தங்களது தோள்களில் சுமந்து சென்றனா்.
இதே போல் முன்னதாக மத்திய பிரதேசம் இந்தூரில் இந்து பெண்ணின் இறுதி பயணம்; இறுதி சடங்கைசெய்த முஸ்லிம் இளைஞர்கள் அந்த செய்தியினை படிக்க https://www.adminmedia.in/2020/04/blog-post_96.html
மேலும் உத்திர பிரதேசத்தில் இறந்த இந்துவை ராம ராம் கோஷத்துடன் அடக்கம் செய்த் இஸ்லாமியர்கள் அந்த செய்தியினை படிக்க https://www.adminmedia.in/2020/03/blog-post_149.html
இது போல் இன்னும் பல இடங்களிலும் மனித நேயம் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றது
Tags: முக்கிய அறிவிப்பு