Breaking News

இந்து பெண்ணின் இறுதி பயணம்; இறுதி சடங்கைசெய்த முஸ்லிம் இளைஞர்கள்

அட்மின் மீடியா
0
மத்திய பிரதேசத்தில் உள்ள  இந்துாரில், 65 வயது பெண்மணி உடல்நலக்குறைவால் கடந்த  6ம் தேதி இறந்தார். அவரது இரு மகன்களும், தாயின் இறுதி சடங்குகளுக்காக வீடு வந்து சேர்ந்தனர். கொரோனா வைரஸ் பரவி வருவதால், பெரும்பாலான உறவினர்களால் வரமுடியவில்லை. இந்நிலையில், தாயின் உடலை, மயானத்திற்கு எப்படி எடுத்துச் செல்வது என, மகன்கள் இருவரும் தவித்தனர். 


அப்போது அருகில் வசிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் சிறுவயது முதல் எங்களுக்கு தெரிந்தவரான அவருக்கு செய்யும் கடமையாக, நாங்கள் இதை கருதுகிறோம்  என்று இறுதி சடங்கை செய்ய  உதவ முன் வந்தனர்.

இறந்த மூதாட்டியின் உடலை, 2.5 கி.மீ., துாரத்தில் உள்ள மயானம் வரை சுமந்து சென்றனர். அங்கு நடந்த இறுதி சடங்குகள் அனைத்திலும் இளைஞர்கள் உதவியாக இருந்தனர். 

அந்த வீடியோவை பார்க்க

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback