Breaking News

உத்திரபிரதேசத்தில் ஊரடங்கில் பிஸ்கட் வாங்க சென்ற இளைஞர்: அடித்த போலிஸார் 3நாட்கள் கழித்து மரணம்

அட்மின் மீடியா
0
உத்தரப்பிரதேசத்தில் ஊரடங்கை மீறி வெளியே வந்த 22 வயது வாலிபர் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்திருப்பது, அப்பகுதியில் பெரும் சர்ச்சையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



உத்தரபிரதேசத்தில் அம்பேத்கர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான  ரிஸ்வான் அகமத் பிஸ்கட் வாங்குவதற்காக கடைக்குச் சென்றபோது  வழியில் தடுத்து நிறுத்திய காவலர்கள் ஊரடங்கில் ஏன் வெளியே வந்தாய் என அந்த வாலிபரை அடித்துள்ளனர். இச்சம்பவம் நடந்து மூன்று நாள்கள் கழித்து ரிஸ்வான் அகமது உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த ரிஸ்வானின் தந்தை  கூறுகையில் என் மகன் ஜஷாபூர் பகுதியில் உள்ள கடைக்கு வீட்டிற்குத் தேவையான பொருள்கள் வாங்குவதற்காக ஏப்ரல் 15-ம் தேதி மாலை 4 மணி அளவில் சென்றிருந்தான். செல்லும் வழியில் தபால் அலுவலகம் அருகில் இருந்த ஒரு பெண் காவல் அதிகாரியும், சில காவலர்களும் அவனைத் தடுத்து நிறுத்தி கடுமையாக அடித்துள்ளனர். இதனால் உடலில் காயங்கள் ஏற்பட்டன என்று கூறினார். 

இதுகுறித்து காவல்துறையின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவினாஷ் குமார் மிஸ்ரா கூறுகையில் இந்த தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உயிரிழந்தவரின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்தவுடன் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

   


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback