ரூ 10 கோடி நஷ்ட ஈடு அவதூறு பரப்பிய ஊடகங்களுக்கு மவ்லானா சஜ்ஜாத் நோமானி நோட்டீஸ்
அட்மின் மீடியா
0
சீனாவில் தொடங்கி உலகமெங்கும் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவி வருகிறது. சாதி மத பேதமின்றி அனைத்து சமூகத்தினரையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் ஆலோசனை கூட்டமே காரணம் என்பதாக ஊடகங்கள் ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கு எதிராக பல கற்பனை செய்திகளை வெளியிட்டன
மேலும் இதுதான் தருணம் என காத்திருந்த இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் பழைய வீடியோக்கள், மற்றும் எங்கோ நடந்த சம்ப்வத்தை இங்கு நடந்ததாக கூறி பல வீடியோக்களையும் கட்டுகதை பரப்பி, மக்களை நம்ப வைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
அதில் வட மாநில பல மீடியாக்கள் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய முன்னாள் செய்தி தொடர்பாளருமான மவ்லானா சஜ்ஜாத் நோமானி குறித்து ஊடகங்கள் அவதூறு பரப்பின. தனது புகைபடத்தை பயன்படுத்தி எனது பெயருக்கு களங்கம் விளைவித்து அவதூறு பரப்பியதற்காகவும், தன் மீதான மரியாதையை சீர் குலைத்ததாகவும் கூறி ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு பொய் தகவல் பரப்பிய ஊடகங்களுக்கு மவ்லானா சஜ்ஜாத் நோமானி தனது வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளர்.
மேலும் அவதூறு பரப்பிய ஊடகங்கள் அனைத்தும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது
source: http://muslimmirror.com/eng/muslim-cleric-serves-defamation-notices-to-more-than-20-media-houses/
Tags: மார்க்க செய்தி