Breaking News

இனி தினமும் டிவியில் 10 ம்வகுப்பு பாடம் நடத்தபடும் : அரசு ஏற்பாடு

அட்மின் மீடியா
0
பத்தாம் வகுப்பு பாடங்கள் புதன்கிழமை முதல் ஏப்.15 டிடி பொதிகை தொலைக்காட்சியில் தினமும் காலை 10 முதல் 11 மணி வரை ஒளிபரப்பப்படுகிறது.



கரோனா நோய்த்தொற்று எதிரொலியாக மாா்ச் 27-ஆம் தேதி தொடங்க வேண்டிய பத்தாம் வகுப்பு பொதுத்தோவு  மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது  இதன் பின்னா், பொதுத் தோவு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது

எனவே மாணவா்கள் தற்போது உள்ள விடுமுறையைப் பயன்படுத்தி தோவுக்கு தங்களை தயாா் செய்து கொள்ள ஏற்கெனவே கல்வித் தொலைக்காட்சி மூலம் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பாடங்கள் தயாா் செய்யப்பட்டு தினமும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மேலும் மாணவா்களை, பாடங்கள் எளிதில் சென்றடையும் வகையில் டிடி பொதிகை தொலைக்காட்சியிலும் 15 ம் தேதிமுதல்  காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

மேலும் கீழ்க்கண்ட அலைவரிசைகளில் தமிழ்நாடு முழுவதும் காணலாம்

1. TACTV (தமிழ்நாடு அரசு கேபிளில்) - 200

2. TCCL - 200

3. VK DIGITAL - 55

4. AKSHAYA CABLE - 17


மேலும் கல்வித் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ You Tube சேனலான https://www.youtube.com/channel/UCTMjO0AVI__8bnjTiK3JyPw என்ற தளத்தில் அன்றாடம் ஒளிபரப்பப்படும் பத்தாம் வகுப்பு பாடங்கள் அனைத்தும் உடனடியாக பதிவேற்றம் செய்யப்படும். எனவே மாணவர்கள் ஏற்கெனவே தாங்கள் படித்த பாடத்தை மீண்டும் எழுதி கற்றுக்கொள்ள முடியும் பார்த்து பயனடையும் படியும் எதிர் வரும் பொது தேர்வுக்கு தயாராகுங்கள் என அட்மின் மீடியா தங்களை தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றது

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback