Breaking News

ஆபாச படங்களை செல்போனில் வைத்திருந்தால் நடவடிக்கை பாயும் என சென்னை ஏடிஜிபி எச்சரிக்கை

அட்மின் மீடியா
0
ஆபாச படங்களை செல்போனில் வைத்திருந்தால் நடவடிக்கை பாயும்  என சென்னை ஏடிஜிபி எச்சரிக்கை


கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஏடிஜிபி ரவி அவர்கள் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மற்றும் இணையத்தில் பதிவேற்றம் செய்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என  தெரிவித்தார். இது தொடர்பாக 12 நபர்கள் கைதும் செய்யப்பட்டனர். மேலும் தற்போது இனி செல்போனில் ஆபாச படங்களை வைத்திருந்தாலே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

ஆபாச படம் குற்றம் தொடர்பாக அனைத்து உயர் அதிகாரிகள் மற்றும் ஐ.ஜி.களுக்கு இந்த சுற்றறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளிக்கும் பட்சத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.குற்றமில்லாத மாநிலமாக தமிழகம் உருவாக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback