Breaking News

ஊட்டி கோவை நெடுஞ்சாலையில் மான்கள் என ஷேர் செய்யபடும் செய்தியின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
ஊட்டி கோவை  நெடுஞ்சாலையில் மான்கள் என பலரும் ஓர் புகைபடத்தினை சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்கின்றார்கள்



அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவினால் மக்கள் நடமாட்டம் இல்லை இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அப்படி உள்ள ஊட்டி-கோவை நெடுஞ்சாலையில் மான்கள் கூட்டமாய் அமர்ந்து இருப்பதாக இப்புகைப்படம் முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் வைரலாகி வருகிறது.


அந்த சம்பவம் ஜப்பான் நாட்டில் நடந்தது ஆகும், ஜப்பான் நாட்டில் உள்ள நாரா நகரத்தின் சாலைகளில் மான்கள் வந்து அடிக்கடி அமர்ந்து கொள்ளும் சம்பவங்கள் பலமுறை நிகழ்ந்து உள்ளது அப்ப்டி 2017 ம் ஆண்டு மான்கள் வந்த புகைபடத்தை தவறாக பொய்யாக இங்கு நடந்தது போல் ஷேர் செய்கின்றார்கள்

அந்த பகுதிக்கு அருகே நாரா மான்கள் பூங்கா அமைந்துள்ளது. அங்கிருந்து மான்கள் அடிக்கடி வரும் என கூறப்படுகின்றது


அட்மின் மிடியா ஆதாரம்


https://steemit.com/travel/@raja/the-japanese-city-of-nara-is-renown-for-its-deer


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback