Breaking News

கேரளா ஜமாத்துல் உலமா சபையினர் மோடி அவர்களையும், அமித்ஷா அவர்களையும் சந்தித்து பேசியது என்ன?

அட்மின் மீடியா
1
கேரளா: ஜமாஅத்துல் உலமா பொது செயலாளர் காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியார் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களையும் மார்ச் 20 ஆம் தேதி சந்தித்து பேசினர் அதன் விபரங்கள் வருமாறு,


மோடி அமித் ஷா வை சந்தித்தது ஏன் என அவர்கள்  கொடுத்த பேட்டி

அந்த பேட்டியில் முதலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை முதலில்  சந்தித்தோம் CAA,NPR,NRC குறித்து அனைத்து  விசயமும் நாங்கள் தெளிவாக பேசினோம். ஆனால் எங்களுக்கு அவர்கள் தெளிவான பதில் கொடுக்கவில்லை எனவும்


அதன் பின்பு பாரத பிரதமர் அவர்களை சந்தித்தோம் தற்போது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் NRC,NPR, நடைமுறை படுத்தும் எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாது. முஸ்லிம்களுக்கு இந்த  சட்டத்தினால் பாதிப்பு இல்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளதாக ஜமா அத்துல் உலமா பொது செயலாளர் காந்தபுரம் அபூபக்கர் முஸ்லியார் அறிவித்து உள்ளார்.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback

1 Comments

  1. சமுதாயத்தை அடகுவைக்கும் உலமாக்கள்,

    ReplyDelete