ரேசன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க உத்தரவா? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
ரேசன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க உத்தரவு என்று ஒரு செய்தியை சமுகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்ப வேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
மார்ச் 16 ம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெற்ற பனை மாநாட்டிற்கு தமிழக சட்டமன்ற உறுப்பினர், கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மற்றும் அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ரேசன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக உடலுக்கு நன்மை அளிக்கும் கருப்பட்டி வழங்க கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு பரிந்துரைக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் ” கூறியுள்ளார்
தற்போது பரிந்துரை மட்டுமே செய்ய உள்ள நிலையில் ரேசன் கடைகளில் கருப்பட்டி வழங்க உள்ளதாக தமிழக முதல்வரின் புகைப்படத்துடன் செய்தியை பரப்பி வருகின்றனர்.
Tags: மறுப்பு செய்தி