Breaking News

அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு கொரானா வைரஸ் என பரவும் செய்தி உண்மையா?

அட்மின் மீடியா
0
ஒரு நிமிடம் முன்பு பெறப்பட்டது டிரம்ப் மயக்கம் அடைந்தார்!  எக்ஸ்பிரஸ்!  யு.எஸ். ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், துணை ஜனாதிபதி பென்ஸ் பொறுப்பேற்றுள்ளார்.  அமெரிக்கா முழுவதும் பீதி ஏற்பட்டது.  சீன விசாக்களைக் கொண்ட பல அமெரிக்கர்கள் சீனாவுக்கு விமானங்களுக்கு போட்டியிடுகின்றனர். விமான டிக்கெட் வழக்கம் போல் பத்து மடங்கு.

என்று ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையாயும் சமுகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 
யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

அந்த வீடியோ சம்பவம் கடந்த  5.11.2016 ம் ஆண்டு நடந்தது

அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதி நாள் பிரச்சாரத்தின் போது டொனால்ட் டிரம்ப் மேடையில் பேசும் போது கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பின் காரணமாக அவரின் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக மேடையில் இருந்து பாதுகாப்பு காரணமாக அவரை அழைத்து சென்றார்

அந்த சலசலப்பு ஏன் ஏற்பட்டது என்ற விசாரணையில்  கூட்டத்தில் ஒருவர் துப்பாக்கி வைத்திருப்பதாக நினைத்து  கைது செய்யப்பட்டார், ஆனால் எந்த ஆயுதமும் அவரிடம் இல்லை என்பதால் பின்னர் அந்த நபர் விடுவிக்கப்பட்டார்.

அந்த  நபரை  "ட்ரம்பிற்கு எதிரான குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன்  ஆதரவாளர் என்பது பிறகு தெதெரியவந்தது.

இந்த சம்பவத்தைத்தான் சமூகவலைதளத்தில் பொய்யாக கொரோனாவால் டிரம்ப் பாதித்தார் என பரப்புகின்றனர்

அட்மின் மீடியா ஆதாரம் 1

https://www.nytimes.com/2016/11/06/us/politics/donald-trump-rally.html



அட்மின் மீடியா ஆதாரம் 2


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback