Breaking News

எல்கேஜி யுகேஜி விடுமுறை நிறுத்தி வைப்பு : தமிழக அரசு அறிவிப்பு!

அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்ற அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நேற்று இரவு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதில் அனைத்து மாவட்டங்களில் இருக்கக்கூடிய தொடக்க வகுப்புகளான LKG, UKG ஆகிய  வகுப்புகளுக்கு மார்ச் 16 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை விடுமுறை  என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் கேரள எல்லையை ஒட்டி இருக்கக் கூடிய தென்காசி , தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளுக்கு LKG, UKG முதல் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது

தற்போது மீண்டும் ஒரு சுற்றைக்கை பள்ளிக்கல்வி ஆணையர் தரப்பில் வழங்கப்பட்டிருக்கிறது. அதில், விடுமுறை குறித்து மறு அறிவிப்பு வரும் வரை இந்த தகவலை யாரும் தெரிவிக்க வேண்டாம் என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது.

அதாவது தற்போதைக்கு இந்த விடுமுறை அறிவிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.  விடுமுறை ரத்து என அறிவிக்கவில்லை தற்போதைக்கு  அறிவிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் ஒரு அறிவிப்பு வரும் என்று ஏதிர்பார்க்கப்படுகின்றது.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback