மருமகளை தாக்கிய மாமனார் கைது
அட்மின் மீடியா
0
நெல்லை மாவட்டம் சிங்கை அருகே உள்ள சம்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரசாக். இவரது மனைவி பாத்திமா சபீனா (வயது27). அப்துல் ரசாக் அடிக்கடி குடித்து விட்டு வந்ததால் பாத்திமா சபீனா சத்தம் போட்டுள்ளார். இதனால் அப்துல் ரசாக் வீட்டிற்கு வராமல் அருகில் உள்ள தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார் அவர் சில நாட்களாக வீட்டு வரவில்லை என 19.03.2020 அன்று பாத்திமா சபீனா மாமனார் வீட்டிற்கு சென்று கணவரை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார்.
அப்போது மாமனார் நாகூர் மைதீன் அவர்கள் மகன் வீட்டில் இல்லை என்று அவரை அவதூறாக பேசி சரமாரி அடித்து உதைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது இது தொடர்பாக பாத்திமா சபீனா சிங்கை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகூர் மைதீனை கைது செய்தனர்.
Tags: முக்கிய அறிவிப்பு