Breaking News

இத்தாலியில் இருந்து 240 இந்திய பயணிகளை அழைத்துவந்தது இஸ்லாமிய விமானி பாத்திமாவா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
இத்தாலியில் தவித்துகொண்டிருக்கும் 240 இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் துணிச்சலோடு மீட்டுக்கொண்டு வந்த இஸ்லாமிய பெண் பைலட் பாத்திமா மாஷா அல்லாஹ் நீங்கள் உண்மையான முஸ்லிம் என்றால்  இதை ஷேர் செய்யவும் என்று ஒரு செய்தியுடன் ஒரு போட்டோவும் சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்


அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

கடந்த வாரம் இத்தாலியில் கொரோனா பாதிப்பினால் சரியான விமான போக்குவரத்து இல்லாததால் அங்கு சிக்கித் தவித்த 263 இந்தியர்களை ஏர் இந்தியா போயிங் 777 விமானம் மூலம் பைலட் சுவாதி ராவல் ரோம் நகரத்தில் இருந்து டெல்லிக்கு அழைத்து வந்தார்

இவர் 2006ல் இருந்து முதல் பெண்  தொழில்முறை விமானியாக ஏர் இந்தியாவில்  பணியாற்றி வருகிறார்.

ஆனால் இத்தாலியில் இருந்து பயணிகளை  பெண் பைலட் பாத்திமா என்பவர் தான் அழைத்து வந்ததாகவும்,  அதுவும்  பைலட் சுவாதி ராவலின் புகைப்படத்தை போட்டு கீழே பாத்திமா  என்று கூறிப்பிட்டு பொய்யாக பரப்புகின்றனர்.

அப்படியானால் பலரும் ஷேர் செய்யும் பாத்திமா என்பவர் யார்?

பாத்திமா என்பவர் இந்தியாவின் முதல் இஸ்லாமிய பெண் விமானி ஆவார். அவர் ஹைதராபாத்தை  சார்ந்தவர் அவரது முழு பெயர்  சையதா சால்வா பாத்திமா ஆகும்

அட்மின் மீடியா ஆதாரம்
இத்தாலியில் இருந்து பைலட் சுவாதி ராவல் என்பவர் விமானம் மூலம் அழைத்து வந்த செய்தி

அட்மின் மீடியா ஆதாரம்
இந்தியாவின் முதல் இஸ்லாமிய பெண் விமானிஆன செய்தி



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: முக்கிய அறிவிப்பு

Share this