Breaking News

10-ம் வகுப்பு தேர்வு; அனைத்து பாடங்களும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்: பள்ளிக்கல்வித்துறை

அட்மின் மீடியா
0
கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு தேர்வுக்கு மாணவர்கள்  வீட்டிலேயே தயாராகும் வகையில் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது

21 நாட்கள் ஊரடங்கு உத்தரவில் வீட்டில் இருக்கும் 10 ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள்   மாணவர்கள் படித்த பாடங்களை நினைவுபடுத்துவதும், திருப்புதல் செய்வதும் பொதுத்  தேர்வுக்கு முன்னர் அவசியமானதாகும்.  ஆகையால் வீட்டிலேயே படிக்க அனைத்து பாடங்களும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும், அதனை பார்த்து பாடங்களை படித்து  தேர்வுக்கு தயாராகலாம் என்று தெரிவிக்கபட்டுள்ளது

கல்வித்துறையின், கல்வித் தொலைக்காட்சி வாயிலாக இன்று (25.03.2020) முதல் சிறப்பு நிகழ்வாக பத்தாம் வகுப்பு மாணவர்களின் கல்வி நலனுக்காக பத்தாம் வகுப்பு பாடங்கள் அனைத்தும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது

இதனை கீழ்க்கண்ட அலைவரிசைகளில் தமிழ்நாடு முழுவதும் காணலாம்

1. TACTV (தமிழ்நாடு அரசு கேபிளில்) - 200

2. TCCL - 200

3. VK DIGITAL - 55

4. AKSHAYA CABLE - 17

மேலும் கல்வித் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ You Tube சேனலான https://www.youtube.com/channel/UCTMjO0AVI__8bnjTiK3JyPw என்ற தளத்தில் அன்றாடம் ஒளிபரப்பப்படும் பத்தாம் வகுப்பு பாடங்கள் அனைத்தும் உடனடியாக பதிவேற்றம் செய்யப்படும். எனவே மாணவர்கள் பார்த்து பயனடையும் படியும் எதிர் வரும் பொது தேர்வுக்கு தயாராகுங்கள் என அட்மின் மீடியா தங்களை தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றது




Tags: முக்கிய அறிவிப்பு

Share this