Breaking News

இந்த இருமல் மருந்துக்கு தடை: இதனை வாங்காதீங்க

அட்மின் மீடியா
0
Coldbest -PC இது ஒரு இருமல் சிரப் மருந்து.  இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் நச்சுப்பொருள் இந்த மருந்தில் உள்ளதால் தடை செய்யப்பட்டு இருக்கிறது.

இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த டிஜிட்டல் விஷன் என்ற மருந்து தயாரிப்பு
நிறுவனம்  Coldbest -PC 
என்ற இருமல் மருந்தினை தயாரிக்கிறது.  

இந்த மருந்தில் உள்ள Diethylene Glycol என்ற நச்சுப்பொருள், ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் 9 சிறார்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தியதாக சந்தேம் ஏற்பட்டு  அதுகுறித்த ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து, ஜம்மு-கஷ்மீர் மருந்து கட்டுப்பாட்டு துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது

தமிழகத்தில் உள்ள அனைத்து இணை இயக்குனர்களுக்கும், தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்திற்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. 

அதனால்,  இந்த மருந்தை  வாங்கவோ, விற்கவோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source:

https://m.timesofindia.com/city/dehradun/drug-dept-bans-sale-of-cold-best-pc-syrup/amp_articleshow/74232252.cms

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback