டெல்லி கலவரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்குக்காக கோட்டைபட்டினம் ஜமாத்தார்களின் கோரிக்கை.இன்ஷா அல்லாஹ் அனைத்து பள்ளிவாசல்களிலும் நடக்குமா?
அட்மின் மீடியா
0
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...அன்பான கோட்டைப்பட்டினம் ஜமாத்தார்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு...
டெல்லியில் கலவரத்தின் மூலம் ஷகீத்தாக்கப்பட்ட நமது சகோதர சகோதரிகளுக்காக இன்று (28-02-2020) கோட்டைப்பட்டினம் அனைத்து பள்ளிவாசலிலும் ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு அவர்களுக்காக காயீஃப் ஜனாஷா தொழுகை நடத்தியும், அவர்களின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஆ செய்ய முஸ்லிம் ஜமாத் நிர்வாகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...
எனவே ஜமாத்தார்கள் அனைவரும் ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு உடனே சென்று விடாமல் இந்த நன்மையான காரியங்களில் தாங்களும் இணைந்து அவர்களின் மறுமை வாழ்வுக்காகவும் குடியுரிமை சட்டத்தின் மூலம் ஏற்படும் அநீதிகளிலுருந்து பாதுகாப்பு வேண்டி நமது வாழ்விற்கும் துஆ செய்யுமாறு உங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்...
மேலும் தாய்மார்கள், சகோதரிகள் தங்களது வீட்டில் அவர்களுக்காக யாசின் ஓதி துஆ செய்யுமாறு முஸ்லிம் ஜமாத் நிர்வாகத்தின் சார்பாக அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்...
இப்படிக்கு முஸ்லீம் ஜமாத் (வக்பு) கோட்டைப்பட்டினம்,
இந்த செய்தியினை அட்மின் மீடியா வரவேற்கின்றது மேலும் இதனை இன்று ஜும்மாவில் அனைத்து பள்ளிவாசல்களிலும் நிறைவேற்றவும், ஷாஹின்பாக் நடைபெறும் போராட்டகளத்தில் நடக்கும் ஜும்மாவிலும் நட்த்த அட்மின் மீடியா சார்பாக கேட்டுகொள்கின்றோம்.
Tags: தமிழக ஷாஹீன்பாக்