Breaking News

சென்னை போராட்டகளத்தில் நடைபெற்ற நிக்காஹ்

அட்மின் மீடியா
0
சென்னையிலுள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டக்களத்தில் தம்பதிகளுக்கு இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துவைக்கப்பட்டது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், NRC, NPR உள்ளிட்ட நடைமுறைகளை எதிர்த்தும் வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து நான்காவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஒரு இஸ்லாமிய குடும்பத்தினரின் இல்லத் திருமணம் இன்று நடைபெற இருந்தது.
ஆனால் இந்த போராட்டத்தின் காரணமாக ஷயின்ஷா, சுமையா தம்பதிக்கு நடைபெறவிருந்த திருமணம் தள்ளிவைக்கப்பட்டது.
பின்னர், இங்குள்ள போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் அறிவுறுத்தலின்படி மணமக்களுக்கு போராட்டக்களத்தில்  இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

பாரகல்லாஹு ல(க்)க வபாரக அலை(க்)க வஜமஅ பைன(க்)குமா ஃபீ கைர்... 

நூல்கள்:திர்மிதீ, அபூதாவூத்

பொருள்: அல்லாஹ் உங்களுக்கு அகத்திலும் புறத்திலும் அருள்புரிவானாக...! 

உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக...!

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback