Breaking News

விக்கல் எதனால் வருகின்றது .தொடர் விக்கலை நிறுத்த எளிய வழி என்ன?

அட்மின் மீடியா
0
விக்கல் எதனால்  வருகின்றது 

நாம் அவசரமாக சாப்பிடும் போது திடீரென்று விக்கல் வரும். தண்ணீர் குடித்தவுடன் நின்றும் விடும். 
ஆனால் பல நேரங்களில் சாப்பிடாத போது கூட விக்கல் வந்து விடும். இந்த விக்கல் ஏன் வருதுன்னு யோசிச்சு இருக்கீங்களா?

நம் உடம்பில் நுரையீரலுக்கும் வயிற்றுக்கும் இடையில் உள்ள பகுதிதான் உதரவிதானம். இது ஒரு சவ்வு ஆகும். இதன் பணி, நுரையீரலை சுருங்கி விரிய வைத்து, மூச்சை இழுத்துவிட உதவும்

இதன் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றமே விக்கலுக்கு காரணம்? 

அதாவது சுவாசத்தின் போது உதரவிதானம் கீழ்நோக்கி விரிந்து தட்டையாகிறது. கூடவே குரல் வளை நாண்களும் திறக்கின்றன. இப்போது நுரையீரலில் காற்றை நிரப்ப அதிக இடம் கிடைக்கும். இதனால் நாம் உள் இழுக்கும் காற்று குரல் வளை நாண்கள் வழியாக நுரையீரலுக்குள் எளிதாக செல்ல முடிகிறது. 

அதேபோல் நாம் மூச்சை வெளி விடும் போது உதரவிதானம் மீண்டும் பழைய நிலைக்கு சுருங்கும். இதனால் காற்று வெளியேறுகிறது. மூளையானது பெரினிக்ஸ் என்ற நரம்பின் வழியாக உதரவிதானத்தை இயக்குகிறது.

சில சமயங்களில் பெரினிக்ஸ் நரம்பில் ஏற்படும் எரிச்சலால் உதரவிதானம் முறையின்றி வேகமாக சுருங்கும். அதாவது மூளையின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிச்சையாக இயங்கும். எனவே குரல் வளை நாண்கள் திறப்பதும் மூடுவதும் சரிவர நடக்காது. 

இதனால் தொண்டை வழியாக அதிக காற்றை உள் இழுக்கும் போது அது மூடிய அல்லது குரல் வளை நாண்களின் குறுகிய இடைவெளி வழியே செல்லும். காற்று குரல்வளை நாண்கள் மீது மோதுவதால் ஹிக் என்ற சத்தத்துடன் விக்கல் வருகிறது.

காரணங்கள்:

சாப்பாட்டை வேக வேகமாக சாப்பிடும் போது வயிறு விரிவடைவதால் கூட உதரவிதானத்தின் செயல்பாடு பாதிக்கப்படலாம். 

மேலும் அதிக சூடான, காரமான உணவு சாப்பிடுதல், ஆல்கஹால், புகைபிடித்தல், தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது என்று இதன் காரணங்கள் நீள்கின்றன.

ஏதோ கொஞ்ச நேரம் விக்கல் வந்து நின்று விட்டால் பாதிப்பு இல்லை. ஆனால்  தொடர்ந்து நீடித்தால் அது கவனிக்க வேண்டிய விஷயம். உடனே மருத்துவரை அணுகவும்

விக்கலுக்கு ஒரு எளிய முறை...

விக்கல் வரும்போது தண்ணீர் குடித்தவுடன் பலருக்கு விக்கல் நின்று விடும். அப்படியும் விக்கல் வந்தால் அதை நிறுத்த பல வழிகள் உள்ளன.

இருபது எண்ணும் வரை மூச்சை வெளிவிடாமல் பின்பு வெளிவிடும் போது விக்கல் நிற்கும்.

அன்னாசிப் பழ இலையை இடித்து, சாறு எடுத்து, 15 மில்லி அளவுக்கு குடித்தால் தீராத விக்கல் தீரும்.

கொஞ்சம் சர்க்கரையை வாயில் போட்டு தானாக கரையும் வரை வைத்திருந்தாலும் விக்கல் நிற்கும்.

ஏதாவது ஒரு வழியில் தும்மலை வரவைத்தால் கூட விக்கல் போக வாய்ப்பு இருக்கிறதாம்.
நேராக நின்று ஒரு நிமிடத்திற்கு இரண்டு கைகளையும் மேல்நோக்கி நீட்டி வைத்தால் கூட விக்கல் நின்று விடும்.


இது பற்றிய கானொலி காட்சி

https://youtu.be/01VrkulGaAk

Give Us Your Feedback