7 நாளில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி? மொபைல் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி?
அட்மின் மீடியா
0
முன்பெல்லாம் பாஸ்போர்ட் வாங்க வேண்டும் என்றல் பெரும் அலைச்சல் ஆனால் தற்பொழுது மிகவும் எளிதாகி விட்டது வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க முடியும்.
- எப்படி பதிவு செய்வது ?
இதற்கு மின்னஞ்சல் ஐடி (Email Id) கட்டாயமாக தேவைப்படும்.
- முதலில்https://portal2.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink என்ற இணைய தளத்திற்கு செல்லவும். அதில் புதிய பயனர்கள் (new user) என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
- அதில் பாஸ்போர்ட் அலுவலகத்தை தேர்ந்து எடுத்து அதன்பின் உங்கள் பெயர், பிறந்த தேதி, ஈமெயில், Login ID, பாஸ்வேர்டு கொடுத்து சம்பிட் கொடுங்கள்
- உங்கள் மெயிலுக்கு ஒரு மெயில் வந்திருக்கும். அந்த மெயிலில் உங்கள் அக்கவுண்ட் அக்டிவேட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும் என்று குறிப்பிட்டு இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள். அங்கு உங்களது லாக்இன் ஐடி-ஐ பதிவிடவும். இதைச் செய்தவுடன் உங்கள் அக்கவுண்ட் அக்டிவேட் ஆகிவிடும். மீண்டும் லாக்இன் ஐடி மற்றும் பாஸ்வேர்டு உள்ளிடவும்.
- அவ்வளவுதான் அதில் புதியதாக ஓப்பன் ஆன பக்கத்தில் புதிய பாஸ்போர்ட் என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும். பின் ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் பெறும் தேர்வை கிளிக் செய்யவும்.
- அதன் பின்பு உங்கள் விவரங்களை சரியாக பூர்த்தி செய்து சப்மிட் கொடுங்கள்
- அடுத்தது பாஸ்போர்டுக்கு உண்டான பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்திவிட்டு நேர்காணலுக்கு தேதி மற்றும் ஊரைத் தேர்வு செய்யுங்கள்.
- அடுத்து நீங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்திற்குச் செல்லும் போது ஆன்லைனில் நீங்கள் கொடுத்த தகவல்கள்அடங்கிய சான்றுகளை எடுத்து செல்லவும்
- சில தினங்களில் போலிஸ் வெரிபிகேஷன் முடிந்த 2 வது நாள் பாஸ்போர்ட் விரைவு தபாலில் அனுப்பப்படும்
- இந்த பிராஸஸ் அனைத்து தற்போது 5 நாட்களில் முடிந்து அதிகபட்சம் 7 நாட்களில் உங்கள் பாஸ்போர்ட் உங்கள் கையில் வந்துவிடும்
Tags: முக்கிய அறிவிப்பு