உங்களுக்கு பெண்குழந்தை இருந்தால் நீங்களும் 50,000 பெறலாம் ?முழு விவரம்
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு அரசு, ‘சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்' என்கிற பெயரில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் அரசு வழங்கும் நிதியான 50 ஆயிரம் ரூபாயைப் பெற எப்படி விண்ணப்பிப்பது என்று பார்க்கலாம்
இதற்கான விண்ணப்பம் ஒவ்வொரு மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கிடைக்கிறது. அல்லது
விண்ணப்பம் டவுன்லோடு செய்ய:
என்ற இணைய தள முகவரிக்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
டவுன்லோட் செய்யும் போது அரசின் பெண்களுக்கான திட்டங்கள் அனைத்துக்கான விண்ணப்பங்கள் டவுன்லோட் ஆகும். அதில் சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்துக்கான விண்ணப்பம் மட்டும் எடுத்துக் கொள்ளவும் பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து மாவட்ட சமூக அலுவலரிடம் கொடுக்க வேண்டும்.
முதலமைச்சர் பெண் குழந்தைக்கான திட்டம் 1
முதலமைச்சர் பெண் குழந்தைக்கான திட்டம் 1
குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை
இருக்கிறது என்றால் முதலமைச்சரின் திட்டப்படி அரசால் அந்த பெண் குழந்தை
எதிர்காலத்துக்காக ரூ. 50,000/- டெபாசிட் செய்யப்படும்.
உங்கள் குழந்தைகளில் யார் பெயருக்கு விண்ணப்பித்தீர்களோ, அக்குழந்தைக்கான தொகை அந்த குழந்தை 10ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்தவுடன் அரசு முதிர்வு தொகையாக வழங்கும்.
முதலமைச்சர் பெண் குழந்தைக்கான திட்டம் 2
ஒரே குடும்பத்தில்
இரண்டு பெண் குழந்தை இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் தனி
தனியாக ரூ. 25,000/- விதத்தில் டெபாசிட் அரசால் செய்யப்படும் ஆனால் ஆண் குழந்தை இருக்கக்கூடாது.
குறிப்பு:
சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்துக்கு 1.8.2011க்கு பிறகு பிறந்த பெண் குழந்தைகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்.
உங்களுக்கு ஒரேயொரு பெண் குழந்தை இருந்தால், அந்த குழந்தையின் பெயரில் 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யப்படும். அதுவே இரு பெண் குழந்தைகளாக இருந்தால் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் தலா 25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்வார்கள். பெண் குழந்தை பிறந்த மூன்றுஆண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
உங்கள் குழந்தைகளில் யார் பெயருக்கு விண்ணப்பித்தீர்களோ, அக்குழந்தைக்கான தொகை அந்த குழந்தை 10ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்தவுடன் அரசு முதிர்வு தொகையாக வழங்கும்.
இணைக்க வேண்டிய சான்றுகள்:
* குழந்தையின் பிறப்பு சான்றிதழ்
* சாதி, வருமான இருப்பிட சான்று
* கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டதற்கான சான்று
* ஆண் வாரிசு இல்லை என்பதற்கான வட்டாட்சியர் வழங்கும் உறுதிச்சான்று
* குடும்ப அட்டையின் நகல்
* குடும்ப புகைப்படம்
Tags: முக்கிய அறிவிப்பு