Breaking News

சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்திய 38 தலைவர்கள் உட்பட 20,000 பேர் மீது வழக்கு பதிவு

அட்மின் மீடியா
0
சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முஸ்லிம் அமைப்புகள் சார்பில்  தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு தடைகோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரத்த நீதிபதிகள் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த மார்ச் 11-ம் தேதி வரை தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் அறிவித்தபடி தடையை மீறி போரட்டம் நடைபெறும் என்று இஸ்லாமிய கூட்டமைப்பு அறிவித்தது

அதேபோல் தடையை மீறி சட்டமன்ற முற்றுகை போராட்டம் காலை 10 மணிக்கு வாலாஜா சாலை கலைவாணர் அரங்கில் இருந்து புறப்பட்டு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் முடித்து கொள்ளபட்டது

இந்நிலையில் சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தடையை மீறி பேரணி சென்றதாக 38 தலைவர்கள் உட்பட 20,000 பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்

Give Us Your Feedback