Breaking News

மத்திய அரசின் அடுத்த அதிரடி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை

அட்மின் மீடியா
1
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை: மத்திய அரசு திடீர் 
அறிவிப்பு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை  செயல்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுக்கு  மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விலக்கு அளித்துள்ளது. 

இதனால் தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

நிலத்தடியில் ஹைட்ரோகார்பன் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய கிணறுகள் அமைக்கப்படுவது வழக்கம். 

அவ்வாறு பூமிக்குள் இந்த கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழலின் அனுமதி பெறுவது அவசியம். மேலும் 
அது போல் இந்த கிணறுகளை அமைக்க அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடமும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அவர்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும்.


இந்த நிலையில் இந்த விதிமுறைகளை மத்திய அரசு மாற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதன்படி இனி ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தேவையில்லை. 

அதே போல கருத்துக் கேட்பு கூட்டமும் நடத்த தேவையில்லை. என அறிவித்துள்ளது

இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் தமிழக விவசாயிகள்

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback

1 Comments

  1. மோடி அரசு முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல

    விவசாயிகள் மற்றும் நடுத்தர வியாபாரிகள் அனைவருக்கும் எதிரான அரசு

    ReplyDelete