Breaking News

மருத்துவ கழிவுகளுடன் சீன கப்பல் சென்னை வந்துள்ளதா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
சீன கப்பல் மருத்துவ கழிவுகளுடன்  சென்னை துறைமுகத்திற்கு வந்ததா ?

சீனாவில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ளது . அதை அனுமதிக்கலாமா வேண்டாமா என்று அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
என்று  சமுகவலைதளத்தில்  ஒரு செய்தி பரவுகின்றது

உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது 
யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

சென்னை துறைமுகத்திற்கு மருத்துவ கழிவுகளுடன் வந்துள்ள சீனக் கப்பல் என மீம்ஸ் மற்றும் சில இணையதளங்களில் காண்பிக்கப்பட்டு இருக்கும் கப்பலின் புகைப்படம் India Trade ways இணையதளத்தில் 2017-ல் வெளியாகிய புகைப்படமாகும்.

மேலும் அந்த தகவலை
சென்னை துறைமுகம் மறுத்து விளக்கம் அளித்து உள்ளது.

சென்னை துறைமுக அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், சீனாவில் இருந்து மருத்துவ கழிவுகளுடன் எந்த கப்பலும் சென்னை துறைமுகத்திற்கு வரவில்லை. என மறுப்பு தெரிவித்துள்ளார்கள்

அட்மின் மீடியா ஆதாரம்

https://indiatradeways.com/shipping-probing-cartelization-charges/

https://tamil.oneindia.com/news/chennai/no-medical-waste-ships-from-china-entered-chennai-port-says-officials-amidst-coronavirus-tension-375562.html

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback