மத்திய அரசை கண்டித்து நாளை 08.01.2020 பந்த்
அட்மின் மீடியா
0
மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் நாளை 08.01.2020 வேலைநிறுத்தம் நடைபெறும் என்று 10 மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
மத்திய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேசவிரோத கொள்கைகளை கண்டித்து நாளை 08.01.2020 (புதன்கிழமை) நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது.
அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 25 கோடி பேர் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். போக்குவரத்து, வங்கி வர்த்தகம் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வேலை நிறுத்த பாதிப்பு அதிகமாக இருக்க கூடும் என்கிறார்கள்.
Tags: முக்கிய செய்தி