Breaking News

FACT CHECK: இந்திராகாந்தியின் மாமனார், மற்றும் கணவர் பெரோஸ்கான் புகைப்படம் உண்மையா?

அட்மின் மீடியா
0
மிகசிரமத்தில் கிடைத்த போட்டோ. நேரு இந்திரா அவரின் மாமனார் யூனுஸ்கான். கணவர் பிரோஸ்கான் ஆகியோர் என்று ஒரு புகைபடம் சமூகவலைதளங்களில் பலரும் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது  

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

இந்திராகாந்தி மாமணார் இஸ்லாமியர் என்று தான் இந்த செய்தி பலரும் ஷேர் செய்கின்றார்கள்

ஆனால் அந்த செய்தியும் பொய்யானது
 

இந்த புகைப்படம் 1942 இல் இமாச்சல பிரதேசத்தின் குலுவில் உள்ள ரோரிச் எஸ்டேட்டில் எடுக்கப்பட்டது.

அந்த போட்டோவில் (இடம் இருந்து வலது புறம்)  ஜவஹர்லால் நேரு தனது மகள் இந்திரா காந்தி, நிக்கோலஸ் ரோரிச், எம். யூனுஸ் 

கடைசி இருவரின் போட்டோவை எடுத்து மிகவும சிரமத்தில் கிடைத்த போட்டோ என மாமனார் யூனுஸ்கான். கணவர் பிரோஸ்கான் பொய்யாக சமுக வளைதளத்தில் பரப்புகின்றனர் 

அப்படியானால் அவர்கள் யார்?

நிக்கோலஸ் ரோரிச்

அக்டோபர் 9, 1874 - டிசம்பர் 13, 1947 - ஒரு ரஷ்ய ஓவியர், எழுத்தாளர், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்,  அவர் ஹிப்னாஸிஸ் மற்றும் பிற ஆன்மீக நடைமுறைகளில் ஆர்வமாக இருந்தார் மற்றும் அவரது ஓவியங்கள் ஹிப்னாடிக் வெளிப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 

அவர் 1923 டிசம்பரில் மும்பைக்கு வந்தார் பிறகு இமாச்சல பிரதேசத்தில் குலுவில் குடியேறினர்

இறப்பு : டிசம்பர் 13, 1947 (வயது 73) நாகர், இந்தியாவின் டொமினியன் (இன்றைய இமாச்சலப் பிரதேசம், இந்தியா)

மற்றொறு நபர் முகமது யூனுஸ் கான்

(26 ஜூன் 1916 - 17 ஜூன் 2001) 

1948 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவால் நியமிக்கப்பட்டு இந்திய வெளியுறவு சேவையில்   துருக்கி, இந்தோனேசியா, ஈராக் மற்றும் ஸ்பெயினுக்கான தூதராக பணியாற்றினார். 

யூனுஸ் 1974 இல் வர்த்தக அமைச்சரின் செயலாளராக  இருந்து ஓய்வு பெற்றார்.

1975 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டார். அவர் டெல்லியில் பிரகதி மைதானத்தை நிறுவினார் மற்றும் இந்திய தயாரிப்புகள் மற்றும் நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக உலகம் முழுவதும் வழக்கமான வர்த்தக கண்காட்சிகளை நடத்தினார். 

ஜூன் 1989 இல் அவர் மாநிலங்களவையில் பரிந்துரைக்கப்பட்டார்.

அவர் தனது 84 வயதில் 17 ஜூன் 2001 அன்று புது தில்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில்  நோய்வாய்ப்பட்ட நிலையில் இறந்தார், 

அட்மின் மீடியா ஆதாரம்





https://www.theweek.in/news/india/2018/09/12/forgotten-gandhi-congress-tribute-feroze-raises-eyebrows.html

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback