மசூதிகளில் தொழுகைக்காக பெண்கள் நுழைய இஸ்லாத்தில் எந்த தடையும் இல்லை
அட்மின் மீடியா
0
மசூதிகளில் தொழுகைக்காக பெண்கள் நுழைய இஸ்லாத்தில் எந்த தடையும் இல்லை என இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது
சபரிமலை கோயில், மசூதிகள், பார்சி வழிபாட்டு தலங்களுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியதற்க்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில், மசூதிகளில் தொழுகைக்காக பெண்கள் நுழைய எந்த தடையும் இல்லை என்றபோதிலும், கூட்டுத் தொழுகையில் பெண்கள் பங்கேற்க வேண்டும் என்பது மார்க்கத்தில் கட்டாயம் அல்ல என்று கூறியுள்ளது
இந்த விவகாரம் முற்றிலும் மத வரம்புக்கு உட்பட்டது என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: முக்கிய அறிவிப்பு