Breaking News

ஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பான்களுக்கு தடையா ? உண்மையா

அட்மின் மீடியா
0
ஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பான்களுக்கு தடை என சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள் 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி உண்மை தான்


ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் எனப்படும் ஆர்ஓஅடிப்படையிலான தண்ணீர் சுத்திகரிப்பான்களை தடை செய்வது தொடர்பாக அறிவிப்பாணையை வெளியிட வேண்டும்என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம்  உத்தரவிட்டுள்ளது. 

ஆனால் இதை அமல்படுத்த 4 மாதம் தேவைப்படுகிறது என மத்திய அமைச்சகம் அவகாசம் கோரியுள்ளது.
ஒரு லிட்டர் குடிநீரில், நீரில் கரைந்துள்ள திடப்பொருளின் மொத்த அளவு (TDS-Total Dissolved Solids) 500 மில்லி கிராமுக்கும் குறைவாக இருக்கும் வகையில் குடிநீரை சுத்திகரிக்கும் ஆர்ஓஇயந்திரங்களுக்கு தடை விதிப்பது குறித்த அறிவிப்பாணையை இரு மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

அட்மின் மீடியா ஆதாரம்

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=556969

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback