Breaking News

ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சுமார் 50க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலி?

அட்மின் மீடியா
0
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் தற்போது நடக்கும் போரின் பின்னனியில் நிறைய வரலாறும், வெளியே தெரியும் காரணங்களும், வெளியே தெரியாத காரணங்களும் இருக்கிறது

ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சுமார் 50க்கும் மேற்பட்ட  அமெரிக்க வீரர்கள் பலியாகி இருக்கலாம் என கருதபடுகின்றது இதில் எவ்வளவு சேதம் ஏற்பட்டது, எத்தனை பேர் பலியானார்கள் என்று இன்னும் விவரம் வெளியாகவில்லை.


ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை, அமெரிக்க படைகள் ஈராக்கில் கொன்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாக்தாத் நகரில் உள்ள அமெரிக்க அல் ஆசாத் விமான படை தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 9 முறை ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 50 அமெரிக்க வீரர்கள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதனால் ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த தாக்குதல் தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆல் இஸ் வெல். 2 அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது ஈரானில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. பரவாயில்லை. இது நல்லது தான். எங்களிடம் சக்திவாய்ந்த ஆயுதங்கள், ராணுவம் உள்ளது. நாளை காலை இது பற்றி அறிக்கை அளிப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.


ஐ.நா.,வின் சட்டவிதி 51 ன் படி, எங்கள் குடிமக்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் தற்காப்பிற்காகவே ஆயுதங்களை பயன்படுத்தி பதில் தாக்குதல் நடத்தினோம். நாங்கள் போருக்காக தாக்குதல் நடத்தவில்லை. ஆனால் எங்களை பாதுகாக்க எந்த எல்லைக்கும் சென்று, பதிலடி கொடுப்போம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஜரீப் தெரிவித்துள்ளார்.

ஈரான் ராணுவ தளபதி சுலைமானியில் உடலை புதைத்து சில மணி நேரத்தில் அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் படைகள் ராக்கெட் தாக்குதல் நடத்தி உள்ளது. 


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback