Breaking News

FACT CHECK: வாட்ஸப்புக்கு தடையா மோடி அறிவித்தார் என்று ஷேர் செய்யபடும் NEWS 7 செய்தியின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
தற்போது  சமூக வலைதளங்களில்  பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள் அந்த செய்தி என்னவென்றால் 
 
 


அதில் பாரதபிரதமர் மோடி அவர்கள் வாட்ஸ் அப் இனி இந்தியாவில் இரவு 11:30 மணியிலிருந்து காலை 6 மணி வரை வேலை செய்யாது, தவறான தகவலை பார்வார்ட் செய்பவர்களின் வாட்ஸ் அப் முடக்கப்படும், மேலும் அந்த பார்வார்ட் மெசேஜ் 48 மணி நேரத்தில் தானாக டெலிட் ஆகிவிடும், முடக்கப்பட்ட செயலியை மீண்டும் தொடங்க ரூ.499 செலுத்தி மீண்டும் ஆக்டிவேட் செய்ய வேண்டும் உட்படப் பல விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. என நியூஸ் 7 வெளியிட்ட வீடியோவை பரப்புகின்றார்கள்


இந்த தகவல் உண்மையா என அட்மின் மீடியா ஆய்வு செய்ததில் 

மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகம் சார்பில் இது போன்ற எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று தெரியவந்துள்ளது. 
மேலும், வாட்ஸ் ஆப் நிறுவனம் இது போன்ற உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கவில்லை.

இது முழுக்க முழுக்க வதந்தி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியானால் அந்த வீடியோவின் உண்மை என்ன

கடந்த 4.07.2019 அன்று நியூஸ் 7 தொலைகாட்சியில் ஒளிபரப்பபட்ட வீடியோவினை பாதி கட் செய்து திரித்து அனுப்பியுள்ளார்கள்

அது news7 தமிழ் உடைய செய்தியின் செய்திமாதிரியினை (template)-ல் மேலடுக்கில்(overlay) செய்யப்பட்ட எடிட்டிங் வீடியோ....

பொதுவாக News7 தமிழ் உடைய வீடியோ அவர்களின் background music-உடன் வரும் ஆனால் இதில் அப்படி இல்லை.....பிறகு அந்த வீடியோவில் background image-க்கும் உள்ளே உள்ள வீடியோவின் கலரும் வெவ்வேறாக உள்ளது...

யாரும் பொய்யான விஷயத்தை ஷேர் செய்ய வேண்டாம்

நியூஸ் செவன் தொலைகாட்சியின் அந்த ஒரிஜினல் வீடியோவை பார்க்க





மேலும்  இது சம்மந்தமாக  அப்போதே அட்மின் மீடியா பதிவிட்டது அந்த செய்தியினை படிக்க  இங்கு கிளிக் செய்யவும்



எனவே பொய்யான செய்தியினை யாரும் ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback