Breaking News

வாட்ஸப்புக்கு தடையா மோடி அறிவித்தார் என்று ஷேர் செய்யபடும் செய்தியின் உண்மை என்ன

அட்மின் மீடியா
0
வாட்ஸ் அப்புக்கு ஆப்பு வைத்ததா மோடி அரசு? செய்தியின் உண்மை என்ன..?


தற்போது அனைத்து தரப்பு மக்களும் தகவல் பரிமாற்றத்திற்கு பெரும்பாலாக பயன்படுத்துவது வாட்ஸ்-ஆப் செயலி தான்.

மெசஜ் அனுப்புவதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்த செயலியில் தற்போது, போட்டோ, வீடியோ மட்டுமல்லாமல் மற்றவர்களுக்குத் தேவையான பணத்தையும் கூட அனுப்பும் அளவுக்கு வாட்ஸ் ஆப் செயலி வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்த வாட்ஸ் அப் செயலியை முடக்கப்படுவது, ஹேக் செய்யப்படுவது போன்ற மாதிரியான நிகழ்வுகள் அவ்வப்போது நடக்கின்றது

இந்த நிலையில் நேற்று இரவு வாட்ஸப் செயலி சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாகப் போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்யவோ அல்லது மற்றவருக்கு அனுப்பவோ முடியாத அளவுக்கும் முடக்கப்பட்டது.
இதுவொரு பக்கம் இருக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்ததன் காரணமாகதான் இந்த நிகழ்வுகள் நடைப்பெறுவதாகவும் இனி இது தினமும் தொடரும் என்றும் வாட்ஸப்பில் பொய்யான வதந்தியை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்

அதில் வாட்ஸ் அப் இனி இந்தியாவில் இரவு 11:30 மணியிலிருந்து காலை 6 மணி வரை வேலை செய்யாது, தவறான தகவலை பார்வார்ட் செய்பவர்களின் வாட்ஸ் அப் முடக்கப்படும், மேலும் அந்த பார்வார்ட் மெசேஜ் 48 மணி நேரத்தில் தானாக டெலிட் ஆகிவிடும், முடக்கப்பட்ட செயலியை மீண்டும் தொடங்க ரூ.499 செலுத்தி மீண்டும் ஆக்டிவேட் செய்ய வேண்டும் உட்படப் பல விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்த தகவல் உண்மையா என அட்மின் மீடியா ஆய்வு செய்ததில் 

மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகம் சார்பில் இது போன்ற எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று தெரியவந்துள்ளது.
மேலும், வாட்ஸ் ஆப் நிறுவனம் இது போன்ற உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கவில்லை.

இது முழுக்க முழுக்க வதந்தி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொய்யான செய்தியினை யாரும் ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback