Breaking News

இந்திய தேசிய கீதம் யுனெஸ்கோவால் விருது கொடுக்கபட்டதா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
Happy news, Our national anthem "Jana Gana Mana... "is declared as the "BEST ANTHEM OF THE WORLD"by UNESCO. Just few minutes ago.
Kindly share this. 
Very proud to be an INDIAN.
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👏👏👏👏👏👏👏😊😊😊😊😊😊😊🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚩🌹🌹🌹
✨✨ Meaning of our National Anthem ✨✨
💎💎💎💎💎💎💎💎
🇮🇳 Please try to understand the meaning and pronounce it clearly.

என்று ஒரு  செய்தியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இருக்கின்றார்கள் 

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

இந்திய குடிமக்கள் ஆகிய நாம் தேசிய கீதத்தை ஏற்றுக்கொள்வதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை ஆனால்  அதை வைத்து பொய்யாக பரப்பும் போது  ஏற்க்கமுடியாது

இந்த போலியான செய்தி 2008 இல் இருந்து  மின்னஞ்சல் மூலம் பரவி பின்னர் ஐ.நா.  கவனத்திற்க்கு சென்றது

"இந்தியாவில் பல வலைப்பதிவுகள் இந்த செய்தியை பொய்யாக பரப்புவதை நாங்கள் அறிவோம், ஆனால் இந்தியாவின் கீதம் மட்டும்  அல்ல,  எந்த நாட்டின் தேசிய கீதத்தை பற்றியும் யுனெஸ்கோ அத்தகைய அறிவிப்பை வெளியிடவில்லை என்று உங்களுக்கு உறுதியளிக்க முடியும்" என்று யுனெஸ்கோ அதிகாரி ஒருவர் 2008 இல் இந்தியா டுடேவிடம் தெரிவித்தார்.

ஆகவே யாரும் இது போன்று பொய்யான செய்தியை பரப்பவேண்டாம்

அட்மின் மீடியா ஆதாரம்

https://www.indiatoday.in/latest-headlines/story/india-anthem-email-false-unesco-30726-2008-09-30

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback