Breaking News

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷராப்க்கு தூக்கு தண்டனை

அட்மின் மீடியா
0

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெர்வேஸ் முஷாரஃபுக்கு மரண தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெர்வேஸ் முஷாரஃபுக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு


தேசத் துரோக வழக்கில் முஷாரஃபுக்கு மரண தண்டனை விதித்தது பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம்.

கடந்த 2001ம் ஆண்டு தல் 2008ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அதிபராக இருந்தவர் முஷாரஃப்.


ராணுவப் புரட்சி மூலம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்துவிட்டு அதிகாரத்திற்கு வந்தார்


அச்சமயம்  2007ல் முஷாரப் பாகிஸ்தானில் அவரச நிலையை அமல் படுத்தினார். இது தொடர்பாக, கடந்த 2013 ல் அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

அரசியல் அவசர நிலை பிரகடனம் செய்து, அரசியல் எதிரிகளை பழிவாங்கியதாகவும், நாட்டிற்கு எதிராக சதி செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. 


அவ்வழக்கில் தற்போது அவருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ம் ஆண்டில் இருந்து துபாய் நாட்டில்  வசித்து வரும் முஷராப் அங்கு, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback