விபத்து ஏற்படுத்திய வாகனத்திற்கு இன்ஸூரன்ஸ் இல்லையா? ஏலம் விட தமிழக அரசு உத்தரவு
அட்மின் மீடியா
0
விபத்து ஏற்படுத்திய வாகனத்திற்கு மூன்றாம் நபர் காப்பீடு இல்லையென்றால், வாகனத்தை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையை இழப்பீடாக வழங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வாகனம் விபத்தில் சிக்கினாலோ, விபத்தை ஏற்படுத்தினாலோ, மோட்டார் வாகன சட்டப்படி காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து உரிய இழப்பீடு பெற முடியும்.
இந்நிலையில், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது.
இதன்படி, விபத்தில் மரணம், காயம் அல்லது பொருட் சேதத்தை ஏற்படுத்திய வாகனமானது, 3-வது நபர் காப்பீடு செய்யப்படவில்லை என்றாலோ, வாகன உரிமையாளர் காப்பீட்டு ஆவணங்களை அளிக்க தவறினாலோ அந்த வாகனத்தை ஏலத்தில் விற்பதற்கான நடவடிக்கையை மாஜிஸ்திரேட் எடுக்க முடியும்.
இதன் மூலம் கிடைக்கும் தொகையை, விபத்துக்கான இழப்பீட்டை வழங்குவதற்காக நீதிமன்றத்தில் செலுத்தவேண்டும் என்று விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
எனவே உங்கள் வண்டியில் இன்ஸூரன்ஸ் இல்லையென்றால் உடனே ரினிவல் பன்னுங்க இல்லைனா அவ்வளவுதான்
மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!

Tags: முக்கிய செய்தி