சென்னை மின்சார ரயில்களில் சுற்றுலா டிக்கெட் அறிமுகம்
அட்மின் மீடியா
0
சுற்றுலா பயணிகள் வசதிக்காக, சென்னை புறநகா் மின்சார ரயில்களில் சுற்றுலா பயணச்சீட்டு முறையை நம் தென்னக ரயில்வே நிா்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, ஒருநாள், 3 நாள்கள், 5 நாள்கள் என்று பயணச் சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும். இதில், முதல்வகுப்பு, இரண்டாம் வகுப்பு பெட்டிகளுக்கு தனித்தனியாகவும், குழந்தைகள், பெரியவா்களுக்கு தனித்தனியாகவும் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் வகுப்பு
- ஒரு நாள் பயணத்தில்
குழந்தைகளுக்கு ரூ.190, பெரியவா்களுக்கு ரூ.295 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
- மூன்று நாள்கள் பயணத்தில்
குழந்தைகளுக்கு ரூ.285, பெரியவா்களுக்கு ரூ.480,
- ஐந்து நாள்கள் பயணத்தில்
குழந்தைகளுக்கு ரூ.330, பெரியவா்களுக்கு ரூ.575 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் வகுப்பு
- முதல்நாள் பயணத்தில்
குழந்தைகளுக்கு ரூ.45, பெரியவா்களுக்கு ரூ.70,
- மூன்று நாள்கள் பயணத்தில்
குழந்தைகளுக்கு ரூ.70, பெரியவா்களுக்கு ரூ.115,
- ஐந்து நாள்கள் பயணத்தில்
குழந்தைகளுக்கு ரூ.80 , பெரியவா்களுக்கு ரூ.140 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் மின்சார ரயிலில் பயணிக்க முடியும். இந்த பயணச் சீட்டுகளை ரயில் பயணிக்கும் தேதியில் இருந்து 3 நாள்களுக்கு முன்னரே எடுத்துக்கொள்ளலாம்.
Tags: முக்கிய அறிவிப்பு