Breaking News

ஆழ்குழாய் கிணறு மீட்பு கருவி கண்டுபிடிக்க நீங்களும் உதவலாமே

அட்மின் மீடியா
1
ஒவ்வொரு நிமிடமும் 'சுஜித் வெளியே வந்து விடமாட்டானா? உயிருடன் மீட்கப்பட்மாட்டானா  என்கிற  ஏக்கம்  உலகம் முழுவதும் எதிர்பார்த்துக் காத்திருந்தது.

ஆனால்  ஐந்து நாள்களாக நடைபெற்ற மீட்புப் பணி பலனளிக்காமல் சிறுவன் இறந்துவிட்டான்

முறையான திட்டமும் சரியான மீட்பு கருவிகளும் அரசிடமும்  தனியாரிடமும் எதுவுமில்லாமல் இருந்ததே சுஜித்தை மீட்க முடியாமல் போனதற்குக்   ஒரு காரணம் எனப் பல விமர்சனங்கள் எழத் தொடங்கியது


நிலாவுக்கும், செவ்வாய்க்கு ஆட்களை அனுப்பி தண்ணீர் இருக்கின்றதா என முயற்சிசெய்து கொண்டிருக்கிறோம்.ஏன் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் தொழில்நுட்பம் இருக்கும் நாட்டில்  நம் கண் முன்னே நிகழும் இது போன்ற நிகழ்வுகளை தடுக்கவும்  மீட்பதற்கும்  சரியான கருவிகள் இல்லாமல் இருக்கிறோம்.


இப்படி பல விமர்சனங்கள் வந்தாலும், 'இனி ஒரு சுஜித்தை இழக்க வேண்டாம்' என்பதே எமது அட்மின் மீடியா குழுமத்தின் ஏக்கமாக, எதிர்பார்ப்பாக இருக்கிறது.


ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழும் குழந்தைகளை மீட்க நம்மிடம் சரியான கருவிகள் இல்லை என்பது எமக்கு குற்றவுணர்வாக இருக்கிறது. 


தவிர்க்க முடியாத பட்சத்தில் குழந்தைகள் உள்ளே விழுந்துவிட்டால், அவர்களை உடனடியாக மீட்பதற்கான கருவிகளும் நம்மிடையே இருப்பதும் முக்கியம்.


இதன் முயற்சியாக அட்மின் மீடியா இது போன்ற ஒரு புதிய மீட்பு கருவியை உருவாக்க இதற்க்கு என ஒரு  குழுவை அமைக்க  வேண்டும் என எமது குழுமத்தின்  உயர் மட்ட நபர்களின் ஆலோசனையில்  அடிப்படையில் முதல் கட்ட முயற்சியாக முக்கிய  அறிவியல்  ஆலோசகர்கள்  ரோபோடிக்  இன்ஞினியர், டெக்னாலஜிஸ்  talent  மற்றும்  மாணவர்கள் தலைமையில் ஒரு  ஆய்வுக்குழு அமைக்கப்பட உள்ளது.


அவர்களுடன் இன்னும் சில விஞ்ஞானிகளும். ஏற்கவே முற்ச்சி செய்து  கருவி கண்டுபிடித்தவர்களையும் இணைத்துள்ளோம்


ஆகவே ஆழ்குழாய் மீட்பு கருவி கண்டுபிடிப்பில் ஆர்வம் உள்ள அனைவரையும் ஒன்று சேர்க்க நாம் உள்ளோம்.

மேலும் உங்கள் கண்டுபிடிப்புகள் பற்றியும், உங்கள் கருத்துக்களும், அதற்கான முறையான ஆலோசனை வழங்கும்  நபர்களும் நமது அட்மின் 
மீடீயாவை தொடர்பு கொள்ளுங்கள்

+9193622 22786
(Only  whats  up )

இனி ஒரு சுஜித்தை இழக்க வேண்டாம் என்பதே அனைவரின்  விருப்பம். 

இனியும் தாமதித்தால், இழப்புகள் தாங்குவதற்கில்லை.

என்றும் சமுக பணி குழுவில்  அட்மீன் மீடியா

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback

1 Comments