தில்லி கோர்ட்டில் போலீசார் - வக்கீல்கள் இடையே மோதல் கலவரமானது ஒருவர் காயம்,
அட்மின் மீடியா
0
தில்லி
கோர்ட்டில் போலீசார் - வக்கீல்கள் இடையே ஏற்பட்ட மோதலில் வக்கீல் ஒருவர்
காயம் அடைந்தார். போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதனால் பெரும்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டில்லியில் உள்ள திஸ் ஹசரி, நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதில் நீதிமன்ற வளாகத்தில், டில்லி போலீஸ் மற்றும் வக்கீ்ல்கள் இடையே மோதல் ஏற்பட்டது.மோதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
கோர்ட் வளாகத்தில் இருந்த போலீசாரின் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. போலீசார் நடத்திய தடியடியில் காயமடைந்த வழக்கறிஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
Tags: முக்கிய செய்தி