60 வயதிற்க்கு மேற்பட்டவர்களை இலவச ஹஜ் அழைத்து செல்கின்றாரா சத்தார் உண்மை என்ன
அட்மின் மீடியா
0
60 லிருந்து 70 வயதுக்கு உள் இருப்பவர்களுக்கு ஹஜ் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு ஹஜ் செய்ய வசதி மற்றும் பணம் இல்லாதவர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.. அவர் உங்களுக்கு எல்லா உதவியும் செய்வார்... இப்படிக்கு சத்தார் மும்பை இதை அல்லாஹ்வுக்காக ஃபார்வர்ட் செய்யுங்கள் மற்றவர்களுக்கும் உதவட்டும்...
என்று ஒரு தொலைபேசி எண்ணுடன் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் மற்றும் வாட்ஸ் அப்களிலும் பரவி கொண்டிருக்கிறது..
இது உண்மையா? என்று அட்மின் மீடியா களம் கண்டது..
இது முழுக்க பொய்யான செய்தியாகும் இந்த எண்ணில் யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை..
மேலும் கடந்த் 4 ஆண்டுகளை கடந்து தற்போது 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பொய்யான செய்தி இது
நாமும் ஆண்டுதோறும் இந்த செய்தியை யாரும் நம்ப வேண்டாம்.. பரப்பவும் வேண்டாம்...என்று சொல்கின்றோம் ஆனாலும்....இனியாவது திருந்துவீர்களா.
Tags: மறுப்பு செய்தி