கனமழை காரணமாக பல மாவட்ட பள்ளி கல்லூரிகள் விடுமுறை
அட்மின் மீடியா
0
கனமழை காரணமாக சில மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் நாளை முதல் 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக, கடலூரில் 6 சென்டி மீட்டரும், கேளம்பாக்கத்தில் 3 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
இந்நிலை கனமழை காரணமாக
காஞ்சிபுரம்,
செங்கல்பட்டு,
வேலூர்
ராணிப்பேட்டை
திருப்பத்தூர் ஆகிய
மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
Tags: முக்கிய செய்தி