வீடியோ கேம் விளையாடி மூளைசாவு அடைந்த 17 வயது இளைஞனை பாருங்கள் என பரவும் வீடியோ உண்மையா
அட்மின் மீடியா
0
முதல் செய்தி :
17 வயது இளைஞர் 24 மணி நேரமும் செல்போனில் இருந்தார். இப்போது இவர் மூளை செயலிழந்து விட்டது ஆனாலும் அவர் கைகளை பாருங்கள்.
இரண்டாம் செய்தி:
பப்ஜி கேம் விளையாடி அதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு இளைஞனின் வீடியோவை பாருங்கள்
என்று இரண்டு செய்தியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இறுக்கின்றார்கள்
உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி பொய்யானது
அப்படியானால் உண்மை என்ன?
அந்த செய்தியினை ஷேர் செய்பவர்களே சிந்திக்க மாட்டீர்களா
மூளை சாவு அல்லது கோமாவில் இருக்கும் ஒருவரின் கை, கால்கள் இயங்க வாய்ப்பே இல்லை.
ஆனால் அவரின் இரு கைகளின் விரல்களும் அசைகின்றன.
மேலும் இந்த வீடியோ ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரியான பொய்யுடன் கலந்து உண்மை என பரப்பப்படுகின்றது
கர்நாடகாவில் வசிக்கும் சுஜன் என்று சிறுவன் உண்மையிலும் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவனின் போட்டோவை எடுத்து இதுபோன்று தவறான மற்றொரு வீடியோவுடன் அதாவது மருத்துவமனையில் படுத்திருக்கும் நபர் கையில் ஓர் மொபைல் போனை தருவது போன்ற ஒரு வீடியோ உடன் பலவாறாக பொய்யாக பரப்பப்பட்டு வருகின்றார்கள்
அந்த செய்திக்கும் இந்த வீடியோவும் இதில் எந்த விதமான தொடர்பும் இல்லை.
அது போல் மருத்துவமனை படுத்து இருக்கும் நபருக்கு மொபைல் போனை தரும் வீடியோவும் எங்கு எதற்க்காக எடுதார்கள் என்ற விபரம் கிடைக்கவில்லை ஆனால் இதை எல்லா விதமான பொய்களையும் கலந்து பரப்புகின்றனர்
அட்மின் மீடியா ஆதாரம்
Tags: மறுப்பு செய்தி