இனி லைசன்ஸ் எடுக்க கல்விதகுதி தேவையில்லை
அட்மின் மீடியா
0
இனி வாகன ஓட்டுனர் உரிமம் பெற கல்வித்தகுதி தேவையில்லை என தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு
மத்திய மோட்டார் வாகன சட்டப்படி கனரக வாகனங்களை இயக்க விரும்புவோர் 'டிரைவிங் லைசென்ஸ்' பெற குறைந்தபட்சம் 8ம் வகுப்பு படித்திருக்கவேண்டும்
இதனால் படிக்காதவர்கள் லைசன்ஸ் எடுக்கமுடியாத நிலை இருந்து வந்தது
இந்நிலையில் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் கனரக வாகன ஓட்டுனருக்கான கல்வித் தகுதியை நிர்ணயிக்கும் சட்ட விதியை நீக்கி செப். 23ல் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
எனவே இனி கனரக வாகன ஓட்டுனர் லைசென்ஸ் பெற கல்வித்தகுதி சான்றிதழ்களை கேட்க வேண்டாம்' என தமிழக போக்குவரத்து துறையும் அறிவித்துள்ளது
Tags: முக்கிய செய்தி