Breaking News

லலிதா ஜுவல்லரி திருட்டில் பிடிபட்டது பாஜக பொருளாளரா ?

அட்மின் மீடியா
0
லலிதா ஜுவல்லரி திருட்டில் பிடிபட்டது பாஜக பொருளாளரா ?


கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் பலரும் லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை சம்பவத்தில் கைதான மணிகண்டன் திருவாரூர் விளமல் பகுதி பாஜக பொருளாளர் என ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்கின்றார்கள்
இந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
திருச்சி லலிதா நகைக்கடை கொள்ளையில் பிடிபட்ட மணிகண்டன் விளமல் பகுதியின் பாஜக பொருளாளர் என  சொல்வது பொய்யான செய்தி
காவல்துறையிடம் பிடிபட்ட கொள்ளையன் பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை சந்தித்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் என ஓர் படத்தை பரப்பி வருகின்றனர்.
ஆனால், அந்த படம் போட்டோஷாப் செய்யப்பட்டவை
அந்த வலையில் நீங்கள் வீழ்ந்து விடாதீர்கள் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்.

Give Us Your Feedback