Breaking News

ஆழ்குழாய் கிணறுகளை மூடு என்ற கோரிக்கை சரியானதா? அது தவறான முடிவு? எதிர்கால சந்ததியினருக்கு இதை செய்யுங்கள் உடனே

அட்மின் மீடியா
5
மனித வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளில் தலையாயதான நீர் குறித்தும், அதன் பயன்பாடு, தேவைகள், விரயமாக்குதல், பற்றாக்குறை, சேமிப்பு, போன்றவை சமீப காலங்களில்தான் நீர் குறித்த அச்சம் அரசுகளுக்கும், மக்களுக்கும் மெல்ல மெல்ல துளிர்விடத் துவங்கியுள்ளது.


நாட்டில், குடிதண்ணீர், விவசாயம், தொழில் துறை  என  அனைத்தும் நிலத்தடி நீரையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. 

ஆனால், நாளுக்கு நாள் பெருகிவரும் தண்ணீர் தேவை காரணமாக, நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே போகிறது. இதற்கான தீர்வை கண்டறியும் கட்டாயமும் ஏற்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் சமீப காலமாக தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாகிக் கொண்டே வருகிறது.
கடந்த காலங்களில் போதுமான அளவு பருவமழையும் இல்லை
இதனால் நிலத்தடி நீரின் அளவு பரவலாக மாநிலம் முழுவதும் வேகமாக குறைந்து கொண்டே வருகிறது.

தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் நிலையில், மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரும் உணர்ந்துள்ளனர். 

பல்வேறு கட்டுமானங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. தமிழக அரசும் அதனை வலியுறுத்தி வருகின்றது. 

ஆனால் அதே சமயம் இந்த ஆழ்துளை கிணறுகளை மூட பலரும் வலியுறுத்தி வருகின்றது

 அட்மின் மீடியாவின் கோரிக்கை என்னவென்றால்

ஆழ்குழாய் கிணறுகளை மழை நீர் சேகரிப்பு தொட்டிகளாக மாற்றம் செய்தால் எதிர்கால தமிழகத்திற்கு நன்மை பயக்கும்

மேலும் நிலத்தடி நீர்வளம் குறைவாக இருக்கும் பகுதிகளுக்கு இது 
அவசியமானதாகும்

நம் அட்மின் மீடியாவின் இந்த புதிய கோரிக்கை 
சரியானதா.? சாத்தியமானதா
என்று பார்ப்போம்

ஆழ்துளை கிணறுகள் அனைத்து குறைந்தது சுமார் 500 அடி முதல் 1000 அடி குறையாமல் போடப்படுகிறது..

இந்த ஆழ்துளை கிணறுகள் மூலம் பல லட்சம் தண்ணீர் பயன்படித்தியோ , அல்லது சிறுது காலம் பிறகு தண்ணீர் ஊராமல் இருந்தால் அந்த  ஆழ்குழாய் கிணறு பயன்பாடமல் விடப்படுகின்றது.

இப்படி உள்ள ஆழ்துளைகிணறுகளை நாம் மறுபடியும் பயன்படுத்தவும் முடியும் நம் நிலத்தடி நீர்வளம் 100% பெருக்க முடியும்..

ஆம் உண்மை 

மழை காலங்களில் பொழியும் மழைநீர்
 நிலத்திற்குள் செல்ல முடியாமல் அதிக படியான நீர் வீணாக கடலிலும் , சாக்கடையில் கலந்து விடுகிறது.

அதுவே மழைக்காலங்களில் ஓடும் நீர்களை ஆழ்குழாய் கிணறுகளில் விடுவதால் அதன் அடிமட்டம் வரை சென்று நீர் வீணாகாமல் சேமிக்கப்படும்

ஆகையால் இது போன்ற தூர்ந்துபோன கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் ஏரி குளம் போன்றவை  முறையாக மழை காலங்களில் அதை உயிர் ஊட்டவேண்டும்

இந்த நீர்களை எல்லாம் இதை போல் பயன்படாத ஆழ்துளை கிணறுகளில் விட்டால் நிலத்தடி நீர்வளமும் பெருகும்.  
மறுபடியும் அந்த ஆள்குழாய் கிணறுகளில் தண்ணீர் ஊர வாய்ப்பும் உள்ளது.

அனைத்து ஆழ்குழாய்  கிணற்றையும்  முறையாக மழைநீர் சேகரிப்பு தொட்டியாக முறையாக பாதுகாக்கலாம்.

இனியும் பயன்பாடுகள் இல்லா ஆள்குழாய்  கிணறுகளை மூடுவது என்ற எண்ணைத்தை விட்டு ஆக்கபூர்வமான ஒரு விடையத்தை முன்னெடுத்து நிலத்தடி நீர் பெருக வழி செய்வோம்..

உயிரோட்டம் உள்ள இந்த வழிமுறையை  தமிழக அரசு செய்ய அதிகம் பகிர்வோம்.

மழைநீர் சேகரிப்பு முறை

1. ஆழ்துழாய் கிணறு சுற்றி 6×6 பள்ளம் தோண்டவேண்டும்


2 . அந்த பள்ளத்தின் மேல் 1 அடிக்கு  12 mm ராடு கொண்டு பெடல் அமைக்கவேண்டும்

3. அதன் மேல் பெரிய கற்கள் 2 அடிக்கு கொட்டவேண்டும்.

4. அதன் மேல் 2  அடிக்கு 1 1/2 ஜல்லி கொட்டவேண்டும்.

5. அதன் மேல் பாதுகாப்புக்கு கம்பி வலை அமைக்க வேண்டும்


6 அதன் மீது கூழாங்கற்கள் மற்றும் மண் கலவை போட்டுவிடவேண்டும். அவ்வளவுதான் 

இதனை செய்தாலே போதும் ஆழ்குழாய் கிணறுகளை மூடவேண்டாம்.... பூழி செழிப்பாகும்

ஆழ்துளை கிணறுகளை கட்டாயமாக மூட வேண்டுமா?? இந்த  ஆக்கப்பூர்வமான  அறிவுபூர்வமான சிந்தனை பற்றி உங்கள் கருத்து என்ன?

உங்களுடைய கருத்துக்களை எங்களுடைய கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்யுங்கள்

அல்லது உங்கள் கருத்துக்களோடு தொடர்பு கொள்ளுங்கள்

+91 9245581684

+91 9362222786

Tags: முக்கிய செய்தி

Share this

5 Comments

 1. Really good idea.. I appreciate it.

  ReplyDelete
 2. சூப்பர் ஐடியா ஜி இது தமிழ்நாடு எடுத்து நடத்தணும்

  ReplyDelete
 3. நல்ல பயனுள்ள,நடைமுறைப் படுத்துவதற்கு ஏற்ற யோசனை... சோம்பல் தனமான அரசு அதிகாரிகளும், அரசும் செய்வார்களா??

  ReplyDelete
 4. Good one will follow it
  #savewater #savefuture #24bikers #24grids #krishnagiri

  ReplyDelete