பாக்கெட்டில் உள்ள பவர் பேங்க் வெடித்து நடந்த சம்பவம் உண்மையா?
அட்மின் மீடியா
0
கண்ணூர் விமான தளத்தில் நடந்த சம்பவம் பாக்கெட்டில் பவர் பேங்க் வைத்து மொபைல் சார்ஜ் செய்தபோதுஃ நடந்தசம்பவம் இது அனைவரும் தெரிந்து கொள்ள maximum ஷேர் செய்துகொள்ள வேண்டும்
என்ற ஒரு செய்தி கடந்த சில மாதங்களாக சமுகவளைதளத்தில் பரவலாக பலராலும் ஷேர் செய்யபட்டு வருகின்றது
அந்த செய்தி உண்மையா? என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அப்படியானால் உண்மை என்ன?
இந்த செய்தி கடந்த ஆண்டு துபாயில் உள்ள ஒரு மாலில் நடந்ததாக பரப்பப்பட்டது
அதன் பிறகு இதை இப்பொழுது இங்கு கேரளா கண்னுர் ஏர்போர்ட்டில் நடந்ததாகவும்
பலவாறாகப் பொய்யாக பரப்பப்பட்டு வருகின்றது
இந்த சம்பவம் கடந்த 2018 ,ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த செய்தியாகும்
மேலும் இந்த சம்பவம் மொராகோவில் உள்ள அகாடிர் என்ற ஊரில் உள்ள ஓர் சூப்பர் மார்க்கெட்டில் உள்ள கடையில் திருடி மாட்டிக் கொண்ட ஒரு 30 வயது நபர் திரும்பிவந்து அதே கடையில் தன்னை தானே பெட்ரேல் ஊற்றி எரித்து கொள்கின்றான்.
ஒரு வாடிக்கையாளர் எடுத்த 59 விநாடிகளின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி, மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களின் கூக்குரலுடன் , எரிகின்ற நிலையில் அந்த மனிதன் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நடந்து செல்வதைக் காண முடிகிறது . பிறகு அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவனுடைய தீயை அணைக்கின்றனர்
உடலி தீ காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு இறந்து விடுகின்றான்.
அட்மீன் மிடியா ஆதாரம்
அட்மீன் மிடியா ஆதாரம்
Tags: மறுப்பு செய்தி